இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

இந்தியாவில் புதிதாக 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாளில் கொரோனா பாதித்த 703 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2 லட்சத்து 51 ஆயிரத்து 777 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாடு முழுவதும் 20 லட்சத்து 18 ஆயிரத்து 825 பேர் கொரோனாவுக்கு சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

மேலும் நாட்டில் இதுவரை 9 ஆயிரத்து 692 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.