fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » இலங்கையில் முதல்முறையாக அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட கொரோனா உடல்கள்
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

இலங்கையில் முதல்முறையாக அரச செலவில் அடக்கம் செய்யப்பட்ட கொரோனா உடல்கள்

கொரோனா தொற்றினால் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்கள் இன்று(05) கிழக்கு மாகாணத்தின் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக குறித்த இரண்டு சடலங்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

சடலங்களை அடக்கம் செய்யப்படும் போது, மத அனுஸ்டானங்களை மேற்கொள்ளவும், உறவினர்கள் இரண்டு பேர் வீதம் பங்கேற்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்ககோரி கடந்தகாலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கபட்டன.

இந்த நிலையில், நீண்ட காலத்திற்கு பின்னர் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், அதற்கென சுகாதார அமைச்சினால் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

சடலங்களை அடக்கம் செய்ய சில இடங்கள் பரிந்துரைக்கப்பட்டடிருந்த நிலையில், இரணைத்தீவு பகுதியில் சடலங்களை அடக்கம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இதற்கு இரணைதீவு பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்ததுடன், போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தனர்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரேரணையிலிருந்து அரசாங்கம் முழுமையாக விலக இடமளியோம்! சுமந்திரன்

World News

மருதனார்மடம் பொதுச் சந்தை கொத்தணி: 39 ஆக உயர்வடைந்த தொற்றாளர்கள்!

N N

பணியாளர்களுக்காக திங்கள் முதல் ரயில் சேவை ஆரம்பம்!

World News