fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

குளுமையான மசாலா மோர்

கோடைக்காலங்களில் உடலில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதை சரிசெய்ய நீர்ச்சத்து நிறைந்த பானங்களை சாப்பிடுவோம்.அந்த வகையில் மோரை அதிகமாக சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பத்தை சரிசெய்யலாம்.

குளுமையான மசாலா மோர் – cool spicy buttermilk

குளுமையான மசாலா மோர்

குளுமையான மசாலா மோர் - cool spicy buttermilk

குளுமையான மசாலா மோர் குளுமையான மசாலா மோர் Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • கெட்டித் தயிர் - 1 கப்
  • தண்ணீர் - 1 கப்
  • கொத்தமல்லி - 2 டீஸ்பூன்
  • மோர் மிளகாய் - 1
  • உப்பு - தேவையான அளவு
  • தாளிப்பதற்கு..
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • கடுகு - 1/4 டீஸ்பூன்
  • அரைப்பதற்கு...
  • பச்சை மிளகாய் - 1/2
  • கறிவேப்பிலை - 3 இலை
  • இஞ்சி - 1/4 இன்ச்

Instructions

ஒரு பாத்திரத்தில் தயிர், தண்ணீர், உப்பு சேர்த்து நன்கு அடித்து மோர் தயாரித்து தனியாக வைத்து கொள்ளவும். பின்பு அரைப்பதற்கு எடுத்து வைத்துள்ள பொருள்களை அரைத்து மோரில் சேர்த்துக் கொள்ளவும். பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அதே எண்ணெயில் மோர் மிளகாயை வறுத்துக் கொள்ளவும். வறுத்த மோர் மிளகாயை மோரில் உடைத்து போட்டு, தாளித்ததையும் ஊற்றி, கொத்தமல்லியைத் தூவி தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்.

 

Related posts

சுவையான வெண்டைக்காய் சாதம்

N N

முறுகலான முருங்கைக் கீரை தோசை

N N

வித்தியாசமான காரைக்குடி பேபிகார்ன் ஃப்ரை ரெசிப்பி!!

N N