fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் தலைவர் வதக்கான்

மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா இருந்தபோது, ஊடகக் குழு அமைக்க அவருக்கு உதவியாக இருந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வதக்கான் இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் பயிற்சி முகாமில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது குறித்து காங்கிரஸ் கேள்வி எழுப்பியது தனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக வதக்கான் தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இணைந்த காங்கிரஸ் தலைவர் வதக்கான்

நாட்டிற்கு எதிராக இருக்கும் கட்சியின் ஒரு பகுதியாக அவர் இருக்கவில்லை, எனவே அந்த கட்சியை விட்டு வெளியில் வருவதை தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார். மேலும், நரேந்திர மோடியின் நலத்திட்டங்கள் தொடர்பான வாக்குறுதிகளை நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் 20 வருடங்களுக்கும் மேலாக இருந்து வந்த வதக்கான், காங்கிரஸில் இருந்து வெளியேறியது அதிர்ச்சியாகவே உள்ளது.

இந்நிலையில், இன்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் முன்னால் பாஜகவில் இணைந்தார். பல ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்து வருகிறேன். ஆனால், குடும்ப அரசியல் கொள்கையை காங்கிரஸ் பின்பற்றி வருகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது. சுய மரியாதைக்குரியவர்களுக்கு காங்கிரஸில் இடமில்லை என்று கூறியுள்ளார்.

வதக்கான் தேர்தலில் போட்டியிட பாஜக அவருக்கு ஒரு தொகுதியை அளிப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பள்ளிகளிலுள்ள சிற்றுண்டி சாலைகள் தொடர்பில் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கை!

World News

இந்தியாவில் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன்

N N

தீபாவளி பண்டிகைக்கு அரசு பேருந்துகளில் இன்று முதல் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்

N N