fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

நாளை வெளியாகிறது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கு காங்கிரஸ் சார்பாக தமிழ்நாட்டில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை ராகுல் காந்தி ஒப்புதலுடன் நாளை வெளியிட உள்ளனர்.

     தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 9 பாராளுமன்ற தொகுதியும், புதுச்சேரியும் கொடுக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் போட்டியிட இருக்கும் திருவள்ளூர், ஆரணி, தேனி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, கரூர், விருதுநகர், திருச்சி, கன்னியாகுமரி போன்ற தொகுதியில் போட்டியிட அதிகமானோர் அவர்களின் விருப்ப மனு அளித்துள்ளனர். கட்சி மேலிடத்தில் காங்கிரஸ் தேர்வு குழுவினர் அனுப்பி உள்ள வேட்பாளர்கள் பட்டியல் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

நாளை வெளியாகிறது காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல்

     வேட்பாளர் பட்டியலில் இடம் பிடிக்க அதிகமான போட்டி நிலவுகிறது. இதில் போட்டியிட விரும்புவோர் டெல்லியில் முகாம் போட்டு இருக்கிறார்கள். தலைவர் ராகுல் காந்தி  வேட்பாளர்கள் பட்டியலை பரிசீலனை செய்து வருகிறார். அகில இந்திய காங்கிரஸ் மத்திய தேர்வு குழு வேட்பாளர்களின் இறுதிப் பட்டியலை உருவாக்கி உள்ளது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன் பெயரும் இருக்கும் என்று கட்சியின் முக்கிய நிர்வாகி தெரிவித்து உள்ளார். இந்த வேட்பாளர் பட்டியல் ராகுல்காந்தி ஒப்புதலுடன் நாளை வெளியாகும் என்று அறிவித்துள்ளார்கள்.       

Related posts

பெண் உடம்பில் 100 வெட்டுக்காயங்கள்: மாந்திரீக குடும்பத்தின் செயலால் பரபரப்பு

World News

இந்து என்று உச்சரித்தாலே சிலருக்கு ‘அலர்ஜி’: வெங்கையா நாயுடு

World News

கொரோனா: வீடியோ அழைப்பு வழியாக முடிந்த திருமணம்

World News