fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

இயக்குனருக்கும் ஐஸ்வர்யா தத்தாவுக்கும் இடையே மோதல்

ஐஸ்வர்யா தத்தா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். எஸ்.எஸ்.ராஜமித்திரன் இயக்கத்தில் உருவாகும் அலேகா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநருக்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

     ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா. தற்போது கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.  இந்த வகையில் அலேகா படத்தை புதுமுக இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமித்திரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்திற்கு கதாநாயகனாக ஆரி நடித்துள்ளார். படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் போர்வைக்குள் காதலர்களின் கால்கள் தெரியும் படி படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் சர்ச்சை ஏற்ப்பட்டதால் படக்குழுவினர் இது காம படம் இல்லை, காதல் படமாக உருவாகிறது, என்று விளக்கம் அளித்துள்ளார்கள்.

இயக்குனருக்கும் ஐஸ்வர்யா தத்தாவுக்கும் இடையே மோதல்

     படத்தின் படப்பிடிப்பு நடக்கும் போது இயக்குனருக்கும் ஐஸ்வர்யா தத்தாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கான காரணம் நடிகை ஐஸ்வர்யா தத்தா படப்பிடிப்புக்கு தாமதமாக வந்து இருக்கிறார். அவருக்காக மற்ற எல்லாரும் காத்திருக்க வேண்டியதாக உள்ளதால் அவரைக் கண்டித்து இருக்கிறார். இந்தச் சண்டை பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

RRR படத்தின் புதிய டீஸர், தெறிக்கவிட்ட ராஜமௌலி..!!

TamilTwin India

தீபாவளிக்கு ரிலீஸாகும் சங்கத் தமிழன்

N N

மாஸ் மகாராஜா படத்தில் இணையும் ஹீரோயின் த்ரிஷா !

TamilTwin India