தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன் என இவர் ஜோடி சேர்ந்து நடிக்காத கதாநாயகர்களே தமிழில் கிடையாது.
பாஸ் என்கிற பாஸ்கர் படத்திற்குப் பின்னர் சினிமா வாழ்க்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த இவர் தனிப்பட்ட பிரச்சினைகளால் ராஜா ராணி படத்தின்மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்தப் படம் இவருக்கு ஹிட் ஆக, பெரிய அளவில் பேமசாகினார்.
கதாநாயகியை மையமாக எடுக்கப்பட்ட படங்களில் அதிக அளவில் நடித்தவர் என்ற பெருமையை பெற்றவர் நயன். இவருடைய கதைத் தேர்வு இவரை சினிமாவில் நிலைத்து நிற்க உதவுகிறது.

இந்தநிலையில் தற்போது இவர் மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட்டாகி 200 கோடி வருவாய் ஈட்டிய லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ராம் சரண் கைப்பற்ற மோகன் ராஜா இயக்க, சிரஞ்சீவி மற்றும் நயன்தாரா நடிக்கின்றனர்.
மலையாளப் படமான லூசிபர் படத்தில் மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் பாதி அளவே பயணிக்கும் வகையில் இருக்கும், ஆனால் தெலுங்கில் இப்படம் நயன்தாராவுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் வகையில் கதையானது மாற்றப்பட்டுள்ளது.
கதையில் முக்கியத்தும் இருந்தால் மட்டுமே நடிப்பதாக நயன் தாரா கண்டிஷன் போட படக் குழுவினர் இதனை செய்ய முன் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.