Tuesday, September 27, 2022
HomeEvents-நிகழ்வுகள்கொழும்புத்துறையில் நிவாரணப் பணி(Photos)

கொழும்புத்துறையில் நிவாரணப் பணி(Photos)

தற்போது புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வரும் சீரடி சாய்பாபா பக்தனான பாலமயூரனின் பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்.கொழும்புத்துறைப் பகுதியில் வறிய நிலையிலுள்ள இருபது குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு வாழ்வாதார உதவியாக நிவாரண உதவி இன்றையதினம் வழங்கப்பட்டது.

இன்று சனிக்கிழமை(25.6.2022) முற்பகல்-11 மணியளவில் கொழும்புத்துறை சனசமூக நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில் குடும்பம் ஒன்றிற்குத் தலா ஐந்து கிலோ அரிசி வீதம் வழங்கி வைக்கப்பட்டது.

இதற்கான நிதி ஒழுங்கினை தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளரும், சமூக சேவையாளருமான அ.நித்தியானந்தம்(பிரான்ஸ்) மேற்கொண்டிருந்தார்.

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம், யாழ்.மாநகரப் பிரதி முதல்வர் து.ஈசன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு குறித்த உதவிகளை நேரடியாக கையளித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular