Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஉலகச் செய்திகள்ராணி எலிசபெத்துக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே தயார் செய்யப்பட்ட சவப்பெட்டி!

ராணி எலிசபெத்துக்கு 30 ஆண்டுகளுக்கு முன்னரே தயார் செய்யப்பட்ட சவப்பெட்டி!

இங்கிலாந்து அரசின் ராணி எலிசபெத் இயற்கை எய்தியதைத்  தொடர்ந்து அடுத்து அரசர் பதவி சார்லஸுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து அரண்மனையில் இளவரசராக இருந்த சார்லஸ் பதிவியேற்க லண்டனில் உள்ள பக்கிம்காம் அரண்மனைக்கு வந்து சமீபத்தில் பதவியேற்றார்.

ராணி எலிசபெத் உடல் மக்கள் மரியாதை செலுத்தும்பொருட்டு பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனை அதிக ஆண்டுகள் ஆண்டுவந்த ராணியான எலிசபெத் உடலானது செப்டம்பர் 19 ஆம் தேதி தகனம் செய்யப்பட உள்ளதாம்.

பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் மகாராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ராணி எலிசபெத் உடலை நல்லடக்கம் செய்யவுள்ள சவப்பெட்டி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சவப்பெட்டி 30 ஆண்டுகளுக்கு முன்பே தயார் செய்யப்பட்டுள்ளதாம். ராஜ குடும்பத்தினைப் பொறுத்தவரை அவர்களுக்கான சவப்பெட்டியானது உயிருடன் இருக்கும்போதே தயார் செய்யப்படுமாம்.

இந்த சவப் பெட்டியானது காற்று உள்ளே புகாத வகையில் ஈயம் பூசப்பட்ட பெட்டிகளில்தான் தயாரிக்கப்படுவது வழக்கமாம்.

ஈயம் பூசப்பட்ட பெட்டிகளில் உடல் கெட்டுப் போகாமல் குறைந்தது ஓராண்டுகள் இருக்குமாம்.

RELATED ARTICLES

Most Popular