fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

பாடசாலையை மூடுவது மாணவர்களின் எதிர்காலத்தை மூடுவதாகும் – ஜீ.எல்.பீரிஸ்

கொரோனா அபாயம் நீங்க முற்றாக இரண்டு வருடங்கள் செல்லுமென உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளதாகவும் அவ்வாறான நிலையில், மாணவர்களின் பள்ளி வாழ்க்கையை முடக்குவதில் அர்த்தம் இல்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எனவே தற்போதைய பாரிய சவாலுக்கு முகங்கொடுத்து, பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்ததாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சில் இன்று (24) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

பாடசாலையை மூடி வைப்பதானது மாணவர்களின் எதிர்காலத்தை மூடுவதற்கான அர்த்தமாகும். மாணவர்களின் சுகாதார அச்சுறுத்தலை எதிர்நோக்கியவாறு பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என்பது அவசியம் இல்லை.

எனவே, மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்தி, பாடசாலைகளை நடத்திச் செல்வதற்கு அரசாங்கம் முன்னிற்கும் என்று அவர் மேலும் கூறினார்.

Related posts

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கு உணவு தட்டுப்பாடு!

SL News

21 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் எஸ்.பி.பி உடல் நல்லடக்கம்

World News

கொரோனாவுக்கு அமெரிக்காவில் ஒரு லட்சத்து 81 ஆயிரம் பேர் பலி

World News