fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தனித்தேர்வர்கள் ஏப்ரல் 8 முதல் விண்ணப்பிக்கலாம்

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள சிறப்பு துணைப் பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித்தேர்வர்கள் ஏப்.8 முதல் ஏப்.12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

                விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வு சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். 2019-2020-ஆம் கல்வியாண்டு முதல் செப்டம்பர், அக்டோபர் பருவ துணைத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதால் மார்ச் 2019 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்களுக்கு ஜுன்,  ஜுலையில் நடைபெறும் சிறப்பு துணைப் பொதுத் தேர்வெழுத வாய்ப்பு வழங்கப்படுகிறது. தனித்தேர்வர்கள் அவரவர் விண்ணப்பிக்கும் கல்வி மாவட்டத்தில் அமைக்கப்படும்  தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தனித்தேர்வர்கள் ஏப்ரல்8 முதல் விண்ணப்பிக்கலாம்

     தேர்வுக்கான கட்டணமாக ஆன்லைன் பதிவு உள்பட ரூ.175 செலுத்த வேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறும் தேர்வர்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் ஏப்.23,  ஏப்.24 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள்,  சிறப்புத் துணைத் தேர்வு குறித்த கூடுதல் விவரங்கள் www.dge.tn.gov.in   என்ற இணையதள முகவரியில் இடம்பெற்றுள்ளன  என அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Related posts

மார்பகத்தில் கீறல்களுடன் இளம் பெண் மர்ம மரணம்!

World News

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை முடிகிறது

World News

மாமல்லபுரத்தில் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் ஐந்துரதம்

World News