Friday, February 3, 2023
HomeEvents-நிகழ்வுகள்நீண்டகால வாசகரை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்திய சுன்னாகம் பொதுநூலகம்

நீண்டகால வாசகரை எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்த்திய சுன்னாகம் பொதுநூலகம்

சுன்னாகம் பொதுநூலகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான தேசிய வாசிப்பு மாதப் பரிசளிப்பு விழா நிகழ்வு நேற்றுச் செவ்வாய்க்கிழமை(24.01.2023) காலை-10 மணியளவில் மேற்படி பொதுநூலக மண்டபத்தில் வலிகாமம் தெற்குப் பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரன் தர்சன் தலைமையில் சிறப்புற இடம்பெற்றது.

நிகழ்வில் சுன்னாகம் பொதுநூலகத்தின் நீண்டகால வாசகராக விளங்கும் சுன்னாகத்தைச் சேர்ந்த 76 வயதான செ.சிவப்பிரகாசத்திற்குச் சிறப்புக் கெளரவம் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது பொன்னாடை,மாலை அணிவித்தும், நினைவுச் சின்னம் வழங்கியும் சிறப்பாகக் கெளரவிக்கப்பட்டார்.

இவர் சுன்னாகம் பொதுநூலகத்தின் ஆரம்பகாலமான 1964 ஆம் ஆண்டு முதல் மேற்படி நூலகத்தின் வாசகராக காணப்படுவதுடன் நூல்களை இரவல் பெற்றுக் கொண்ட முதலாவது உறுப்பினராகவும் இவரே காணப்படுகிறார்.

சுன்னாகம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் ஓய்வுநிலைக் காசாளரான இவர் வயது முதிர்ந்த தற்போதைய நிலையிலும் தவறாது தினம்தோறும் சுன்னாகம் பொதுநூலகத்திற்கு வருகை தந்து தினசரிப் பத்திரிகைகள் உள்ளிட்டவற்றை ஆர்வத்துடன் வாசித்துப் பயன்பெற்று வருகிறார். அத்துடன் சுன்னாகம் பொதுநூலகத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளிலும் இவரது பங்கேற்புத் தொடர்கின்றது.

இதேவேளை, சுன்னாகம் பொதுநூலக நிர்வாகத்தால் வழங்கப்பட்ட கெளரவத்தை உளமார ஏற்றுக் கொண்ட அவர் இதுதொடர்பில் தனது பெரு மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ளார்.

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular