மயிலணி திருக்குடவாயில் விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீவிஸ்வநாத சுவாமி மஹோற்சவம் ஆரம்பம்(Photo)

சுன்னாகம் மயிலணி திருக்குடவாயில் விசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீவிஸ்வநாத சுவாமி கோயில் வருடாந்த மஹோற்சவம் நாளை சனிக்கிழமை(07.5.2022) பகல்-11 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. தொடர்ந்தும் பத்துத் தினங்கள் இவ்வாலய மஹோற்சவம் இடம்பெறும்.

எதிர்வரும்-11 ஆம் திகதி புதன்கிழமை மாலை-06.30 மணிக்கு மஞ்சத் திருவிழாவும், 14 ஆம் திகதி சனிக்கிழமை மாலை-06.30 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை-09 மணிக்குத் தேர்த் திருவிழாவும், 16 ஆம் திகதி திங்கட்கிழமை காலை-09 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் மாலை-06.30 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் என ஆலய ஆதீன கர்த்தாக்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை, காலை, மாலை இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் காலை உற்சவம் காலை-07.30 மணிக்கும், மாலை உற்சவம் மாலை-05.30 மணிக்கும் ஆரம்பமாகவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)