பிரசித்திபெற்ற யாழ்.சுன்னாகம் கதிரமலைச் சிவன் சொர்ணாம்பிகை அம்பாள் ஆலய வருடாந்த ஆடிப்பூர மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை(31.7.2022) மாலை-5 மணிக்குச் சிறப்பாக நடைபெறும்.
நாளை மறுதினம் திங்கட்கிழமை(01.8.2022) ஆடிப்பூர தினத்தன்று மாலை-5 மணிக்கு ஆலயத் தீர்த்தக் கேணியில் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் இரவு கொடியிறக்க உற்சவமும் இடம்பெற உள்ளதாக மேற்படி ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ நா.சர்வேஸ்வரக் குருக்கள் தெரிவித்துள்ளார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)