Tuesday, August 16, 2022
Homeஆன்மிகம்தேரேறி சுன்னாகம் கதிரமலைச் சிவன் சொர்ணாம்பிகை அம்பாள் எல்லையில்லா அழகுக் காட்சி(Photos)

தேரேறி சுன்னாகம் கதிரமலைச் சிவன் சொர்ணாம்பிகை அம்பாள் எல்லையில்லா அழகுக் காட்சி(Photos)

பிரசித்திபெற்ற யாழ்.சுன்னாகம் கதிரமலைச் சிவன் சொர்ணாம்பிகை அம்பாள் ஆலய வருடாந்த ஆடிப்பூர மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை(31.7.2022) இரவு வெகுசிறப்பாக நடைபெற்றது.

இன்று மாலை-5.45 வசந்தமண்டபப் பூசைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து மாலை-6.45 மணிக்கு சொர்ணாம்பிகை அம்பாள் அலங்கார நாயகியாக திருநடனத்துடன் உள் வீதியில் வலம் வந்தாள்.

அம்பாள் சித்திரத் தேரில் எழுந்தருளியதைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகாரக் கோஷம் முழங்க இன்று இரவு-8 மணியளவில் சித்திரத் தேர் பவனி ஆரம்பமானது. மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரை ஆண் அடியவர்கள் ஒருபுறமும், பெண் அடியவர்கள் மறுபுறமும் வடம் தொட்டிழுத்தனர்.

சித்திரத் தேர் வலம் வரும் வேளையில் வட்டுக்கோட்டை கலாபூசணம் க.நாகப்பு மீணேஸ் கிராமியக் கலைக் ழுழுவினரின் பொம்மலாட்டம், மயிலாட்டம், குதிரையாட்டம், கரகாட்டம் போன்ற கண்ணைக் கவரும் பாரம்பரியக் கலை அம்சங்களும், சிறப்பு மேளக் கச்சேரியும் இடம்பெற்றது.

இன்றைய தேர்த் திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் பக்திபூர்வமாக கலந்து கொண்டதுடன் மேற்படி ஆலயச் சூழல் விழாக் கோலம் பூண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(சிறப்புத் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular