சுண்டிக்குளம் தேசிய வன உயிர்ப் பல்வகைமை ஆய்வு முன்னெடுப்பின் ஆரம்ப நிகழ்வு(Photo)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திண்ணைக் குழுமம் மற்றும் சி.சி.எச் நிறுவனம் ஒன்றிணைந்து முன்னெடுக்கவுள்ள சுண்டிக்குளம் தேசிய வனத்தின் நிலைபேறான அபிவிருத்தி நோக்கிலான உயிர் பல்வகைமை ஆய்வு முன்னெடுப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று திங்கட்கிழமை(06.12.2021) பிற்பகல் யாழ்ப்பாணம் திருநெல்வேலி திண்ணை விடுதியில் சி.சி.எச் நிறுவனத்தின் நிறுவுனர் ரீ.ரீ.மயூரன் தலைமையில்நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, திண்ணைக் குழுமத்தின் தலைவர் ஞானம் ஜெயசீலன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன், விவசாய பீடாதிபதி கலாநிதி எஸ். வசந்தரூபா, ஆய்வுக் குழுவின் இணைப்பாளர் பேராசிரியர் க.கஜபதி, விவசாய ஆய்வு நிலையப் பணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் ரட்ணம் செந்தில்மாறன், வனவளப் பாதுகாப்புத் திணைக்கள பிரதிநிதிகள், விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.

(செ.ரவிசாந்)