fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

இந்திய விமானப்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில் சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் இணைப்பு

அமெரிக்காவில்  போயிங் என்னும் நிறுவனத்திடமிருந்து 22 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 சினூக் ரக ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்வதற்கு இந்திய அரசானது கடந்த 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது. அவற்றில் தற்போது  முதல் கட்டமாக  4 சினூக் ஹெலிகாப்டர்கள் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. குஜராத் மாநிலம் முந்த்ரா துறைமுகத்திற்கு வந்த இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. பின் அங்கிருந்து சண்டிகருக்கு கொண்டு வரப்பட்டது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. விமானப்படை தளபதி ஹெலிகாப்டர்களை முறையாக விமானப்படையில் இணைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்திய விமானப்படைக்கு வலிமை சேர்க்கும் வகையில் சினூக் கனரக ஹெலிகாப்டர்கள் இணைப்பு

நிகழ்ச்சியில் பேசிய அவர்  நாடு பல்வேறு பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளது. எனவே எல்லா பகுதிகளுக்கும் அதிக எடையுள்ள  பொருட்களை எடுத்துச்சொல்ல ஹெலிகாப்டர்கள் தேவை. எனவே சினூக் ஹெலிகாப்டர்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இது நமக்கு தேசிய சொத்து  என்றார்.

சினூக் ஹெலிகாப்டர்கள் இருப்பதால்  இந்திய விமானப்படையின் திறன் மேலும் அதிகரித்துள்ளது. ராணுவத்தில் உபயோகப்படுத்தும் சிறிய ரக பீரங்கிகள், தளவாடங்கள், எரிபொருள் ஆகியவற்றை நிலப்பரப்புகளுக்கும் கொண்டு வர  இந்த ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.

Related posts

இருசக்கர வாகனம் வாங்கினால் இரண்டு ஹெல்மெட்டுகள் இலவசம்

N N

10 ரூபாய்க்கு மதிய உணவு திட்டம் தொடக்கம்!

World News

வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் யாழ்.வாசி!

TamilTwin