fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
செய்திகள்

சீன இரசாயன ஆலை விபத்து

சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள உரத்தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தைத் தொடர்ந்து, அதன் அருகில் உள்ள பூச்சிக்கொல்லி தயாரிக்கும் இரசாயன ஆலையிலும் வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தினால் அருகில் இருந்த வீடுகளும், கட்டடங்களும் இடிந்து விழுந்தன.

சீன ரசாயன ஆலை விபத்து

176 தீயணைப்பு வாகனங்களும், 928 தீயணைப்பு வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில் பலர் பலத்த காயம் அடைந்தனர். விபத்தினால் பாதிக்கப்பட்ட 32 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 58 பேர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 88 பேர் மீட்கப்பட்டனர். மாயமான 28 பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆலைக்கு அருகில் இருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. விபத்து காரணமாக பல இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. விபத்து காரணமாக சீன ரசாயன  ஆலைப் பகுதியிலும், ஆலையில் இருந்து 500 மீட்டர் சுற்றளவு பகுதியிலும் காற்றின் தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரான்ஸ் கடற்கரையில் தினம் வந்து குவியும் போதைப்பொருட்கள்! திணறும் பொலிஸார்

World News

தந்தையை கொன்று உடலை வீட்டுக்குள் புதைத்த சிறுவன்

World News

வடகொரியாவில் முதலாவது கொரோனா நோயாளி? {இரண்டாம் இணைப்பு}

TamilTwin