fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
உலகச் செய்திகள் செய்திகள்

உறைய வைக்கும் பனிக்குள் சீன இராணுவம் கடும் பயிற்சி (Photos)

மைனஸ் 30 டிகிரி வெப்பநிலை நிலவும் பனிப் பிரதேசத்தில் மேலாடை இல்லாமல் சீன இராணுவத்தினர் கடினமாகப் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகியிருக்கிறது.

சீனாவின் மக்கள் விடுதலை ராணுவம் தான் உலகின் மிகப்பெரிய இராணுவம் ஆகும். இந்த இராணுவத்தில் மட்டும் இரண்டு மில்லியன் அளவுக்குப் போர் வீரர்கள் பணிபுரிகிறார்கள்.

போர் வந்தால் அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ளும் வகையில் இவர்களுக்குச் சீன அரசு பிரத்யேக பயிற்சி அளிப்பது வழக்கம். கோடைக்கால பயிற்சி, குளிர்காலப் பயிற்சி என்று இரண்டு முறைகளில் இவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் சீனா – ரஷ்யா எல்லையில் உள்ள ஹைஹே இராணுவ தளத்தில் தற்போது குளிர்காலப் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள் சீன இராணுவத்தினர். சீன ராணுவத்தினர் கடினமான முறையில் இராணுவப் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்கள் தற்போது வைரலாகியிருக்கின்றன.

குளிர்காலப் பயிற்சியையொட்டி மேலாடை இல்லாமல் பனி மீது நின்றபடி சீன இராணுவத்தினர் பயிற்சி மேற்கொள்கிறார்கள். அந்தப் பயிற்சியின் போது பனியை அள்ளி உடலில் அப்படியே அப்பிக் கொள்கிறார்கள். எதிரே நிற்பவர்கள் கண்ணுக்குத் தெரியாத அளவுக்குப் பனி விழும் இடத்தில் நின்றுகொண்டு துப்பாக்கிச்சூடு நடத்துகிறார்கள்.

மைனஸ் 30 டிகிரி வெப்பநிலை நிலவும் பனி பிரதேசத்தில் மேலாடை எதுவும் இல்லாமல் உருண்டு, புரண்டு பயிற்சி மேற்கொள்வதைப் பார்த்தாலே பதைபதைக்கச் செய்கிறது. நெகட்டிவ் டிகிரி வெப்பநிலை நிலவுவதால் அவர்களின் விழிப் படலங்கள் உறைந்து போயிருப்பதையும் பார்க்க முடிகிறது.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் கடுங்குளிர் நிலவும் மலைப் பிரதேசங்களையே எல்லைகளாகக் கொண்டிருக்கிறது சீனா. அதனால், பிரச்சினை என்று வந்தால் சமாளிக்கும் வகையில் குளிர்காலப் பயிற்சியை ஒவ்வொருவருடமும் தவறாமல் மேற்கொள்கிறார்கள் சீன வீரர்கள்!

Related posts

யாழ்.மாவட்டப் புதிய அரசாங்க அதிபர் பொறுப்பேற்பு!!

World News

யாழ்ப்பாணத்தில் தேர்தல் வாக்கு சீட்டு எண்ணும் ஒத்திகை!

World News

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 56 ஆயிரத்தை தாண்டியது!

World News