சீனாவின் அரிசி சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொண்டால் இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கும் என எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று(25) இடம்பெற்ற ஊடகவ சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இதனை கூறினார்.

சீனாவில் அதிகளவான இரசாயன உரங்கள் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சீன அரசாங்கம் நன்கொடையாக வழங்கியுள்ள 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு கிடைக்கும் என அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.