fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
உலகச் செய்திகள் செய்திகள்

கடல் ஏவுதளத்தில் இருந்து 9 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பிய சீனா

சீனா தனது 2-வது கடல் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலமாக 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

சீனாவின் ஜிலின் மாகாணம் சாங்சுன் நகரில் மஞ்சள் கடல் பகுதியில் சீனா தனது 2-வது கடல் ஏவுதளத்தை அமைத்துள்ளது. நேற்று இந்த ஏவுதளத்தில் உள்ள ஒரு கப்பலில் இருந்து ராக்கெட் ஒன்றை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்த ராக்கெட்டில் 9 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

லாங் மார்ச் 11 கேரியர் ராக்கெட், 3 வீடியோ செயற்கைக்கோள்கள், 6 புஷ்புரூம் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. தலா 42 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள்கள் வேளாண்மை, வனவியல் நில வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் தொலைநிலை உணர்திறன் சேவைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 6 செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனா விண்ணுக்கு அனுப்பிய செயற்கைகோள் ஒன்று சுற்றுவட்ட பாதையில் நுழையாமல் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Related posts

வுகான் சந்தையில் உருவாகவில்லை கொரோனா வைரஸ்? புதிய குழப்பம்

World News

தமிழ்ச் சமூதாயமாக ஒன்றிணைய வேண்டும்: விக்னேஸ்வரன் விடுத்துள்ள அழைப்பு!! (Photos)

TamilTwin

ஆடிப்பிறப்பு ஏன் கொண்டாடப்படுகிறது?: கவிமணி அன்னைதாஸன் விளக்கம்! (Photos)

TamilTwin