இங்கிலாந்தில் தந்தை மற்றும் சித்தியால் அடித்துக் கொல்லப்பட்ட குழந்தை

தந்தை மற்றும் சித்தியால் அடித்துக் கொல்லப்பட்ட ஆறு வயது சிறுவனின் கடைசி தருணங்களை காட்டும் காணொளி ஒன்று வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்திலுள்ள Solihull என்ற இடத்தைச் சேர்ந்த Thomas Hughes (29) என்பவரும், அவரது மனைவியான Emma Tustin (32) என்ற பெண்ணும், Thomasஇன் மகனாகிய Arthur Labinjo-Hughes (6) என்ற சிறுவனை அடித்துக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, Arthurஇன் மாற்றாந்தாயாகிய Emma, குழந்தையின் தலையை சுவரில் மோதியடித்துக் கொலை செய்ததாக கூறப்படுகிறது.

நீண்ட நாட்களாக Arthurஐ இருவரும் சித்திரவதைக்குள்ளாக்கியிருக்கிறார்கள். அவனை நீண்ட நேரம் நிற்கவைப்பதும், அவனது சாப்பாட்டிலும் குடிக்கும் பானங்களிலும் உப்பை நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் அளவுக்கு எக்கச்சக்கமாக போட்டு அவனை சாப்பிடக் கட்டாயப்படுத்தியது முதல், அவனை அடித்து நொறுக்கி, அவனது தலையை சுவற்றில் மோதி பல்வேறு கொடுமைகளை செய்துள்ளார்கள் Thomasம் Emmaவும்.

இந்நிலையில், குழந்தை கொல்லப்படுவதற்கு சில மணி நேரம் முன்பு அவன் கடைசியாக பேசிய வார்த்தைகளும், CCTVயில் பதிவான காட்சிகளும் நீதிமன்றத்தில் போட்டுக் காட்டப்பட்டன.

அந்த வீடியோவில், அந்தக் குழந்தை தான் படுத்திருந்த போர்வையைக் கூட தூக்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுவதையும், காலில் அடிபட்டிருப்பதால் நடக்க முடியாமல் கஷ்டப்படுவதையும் காணலாம்.

அத்துடன், அவன் என்னை யாரும் நேசிப்பதில்லை என்று நான்கு முறை கதறுவதையும், 44 விநாடிகளுக்குள், 7 முறை, எனக்கு யாரும் உணவளிக்கப்போதில்லை என்று கூறி அழுவதையும் வெளியிடப்பட்ட ஓடியோவில் நீதிபதிகள் கேட்டார்கள்.

இதற்கிடையில், Thomasம் Emmaவும் தாங்கள் குழந்தையைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதை மறுத்துள்ளார்கள். விசாரணை தொடர்கிறது.