டி.வி யில் இருந்து நிஜ தம்பதிகளாகவே மாறி இருப்பவர்கள் சேத்தன் – தேவதர்ஷினி ஜோடி. இவர்களின் மகள் நியதி. இவர்கள் இருவருமே சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கும் பொழுது தங்களுடைய மகளுக்கு நடிப்பதற்கு தடை விதித்து உள்ளனர். தாய் தந்தையரைப் போலவே நியதியும் 96 படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். 96 படத்தில் சிறு வயது தேவதர்ஷினி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதற்காக இவருக்கு பல பாராட்டுகள் கிடைத்து உள்ளன.

நியதி தற்போது 10 – ம் வகுப்பு படித்து வருவதால் படிப்பில் இப்பொழுது கவனம் செலுத்தட்டும் நடிப்பதை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என சேத்தன் கூறி இருக்கிறார். சேத்தன் தாம் தூம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது. “சினிமாவே குடும்பம் குடும்பமே சினிமா” என சேத்தன் கூறி உள்ளார். தேவதர்ஷினியும் தமிழ், தெலுங்கு என தொடர்ந்து நடித்துக் கொண்டு இருக்கிறார். சேத்தன் இப்பொழுது கென்னடி கிளப் திரைப்படத்தில் சசிகுமார், பாரதிராஜா உடன் பணிபுரிந்து கொண்டு இருக்கிறார்.