தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பொதுவாக நவம்பர்- டிசம்பர் மாதங்களில் பொழிவது வழக்கமாகும், அந்தவகையில் இப்போது வடகிழக்குப் பருவமழையானது நிவர் புயல் காரணமாக வலுத்துள்ளது.
புயல் கரையைக் கடப்பதால் தமிழகத்தில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்பொருட்டு பல வகையான முன்னேற்பாடு நடவடிக்கைகளும் தமிழக அரசாங்கத்தினால் செய்யப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்றுமதியம் 1 மணி முதல் பொது போக்குவரத்து சென்னை, கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் பேருந்து சேவையானது நிறுத்தப்பட்டது.

அதனை அடுத்து சென்னை, செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் சென்னையில் புறநகர் ரெயில் சேவைகள் நாளை காலை 10 மணி முதல் மறு உத்தரவு வரும் வரை ரத்து செய்யப்படும் என்றும், மேலும் அதனையடுத்து காலை 10 மணி வரையிலான சூழலினைக் கருத்தில் கொண்டு ரயில் சேவை இயங்குவது குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதன்படி தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஏறக்குறைய 25 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.