Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஉலகச் செய்திகள்இங்கிலாந்தின் புதிய மன்னராகப் பதவியேற்ற சார்லஸ்.. அன்பு மழையால் மன்னரை குளிரவைத்த மக்கள்!

இங்கிலாந்தின் புதிய மன்னராகப் பதவியேற்ற சார்லஸ்.. அன்பு மழையால் மன்னரை குளிரவைத்த மக்கள்!

ராணி எலிசபெத்தின் மூத்த மகன்தான் சார்லஸ், இவர் மனைவி கமீலாவுடன் லண்டன் வந்ததுடன் பக்கிம்காம் அரண்மனையினைப் பார்வையிட்டார்.

இங்கிலாந்து அரசின் ராணி எலிசபெத் இயற்கை எய்தியதைத்  தொடர்ந்து அடுத்து அரசர் பதவி சார்லஸுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்து அரண்மனையில் இளவரசராக இருந்த சார்லஸ் பதிவியேற்க லண்டனில் உள்ள பக்கிம்காம் அரண்மனைக்கு வந்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து சார்லஸின் பதவிப் பிரமாணம் லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இன்று நடைபெற்றுள்ளது.

சார்லஸ் புதிய அரசராக பதவியேற்றதைத் தொடர்ந்து பொதுமக்கள் அவருக்கு முத்தம் மழை உட்பட பல வகையான வரவேற்புகளைக் கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.

மக்கள் மன்னர்மீதும் மன்னர் குடும்பத்தின் மீதும் கொண்டுள்ள பாசம் குறித்து புதிய மன்னர் நெகிழ்ந்து போய் உள்ளார்.

மேலும் சார்லஸ் கூறுகையில், “என் வாழ்நாள் உங்களுக்கானது” என்று நெகிழ்ந்து பேசியுள்ளார்.

ராணி எலிசபெத் பாஸ்போர்ட் இல்லாமல் எந்த நாட்டிற்கும் செல்லக்கூடிய அதிகாரம் பெற்று இருந்ததைப் போல் இன்றுமுதல் அரசர் சார்லசும் செல்லலாம்.

அரசர் பதவியேற்றதையடுத்து சார்லஸ் புகைப்படம் கொண்ட புதிய கரன்சி வெளியிடப்படும் என்று அறிக்கை வெளியாகியுள்ளது.

RELATED ARTICLES

Most Popular