fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » யாழ்.கோப்பாயில் சிறப்பிக்கப்பட்ட மகளிர் அபிவிருத்தி நிலையக் கண்காட்சி (Video, PHOTOS)
Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள்

யாழ்.கோப்பாயில் சிறப்பிக்கப்பட்ட மகளிர் அபிவிருத்தி நிலையக் கண்காட்சி (Video, PHOTOS)

வடக்கு மாகாணக் கிராம அபிவிருத்தி திணைக்களம் மற்றும் கோப்பாய் பிரதேச செயலகத்தின் அனுசரணையில் மகளிர் அபிவிருத்தி நிலையக் கண்காட்சி இன்று புதன்கிழமை(03) முற்பகல்-10.30 மணி முதல் யாழ்.கோப்பாய்ப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. 

கோப்பாய் பிரதேச செயலாளர் திருமதி- சுபாஜினி மதியழகன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். 

வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் திருமதி- நளாயினி இன்பராஜ் மற்றும் கிராம அபிவிருத்தி திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் ந.பஞ்சலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

விருந்தினர்கள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்ட அங்கஜன் இராமநாதன் நாடாவெட்டிக் கண்காட்சிக் கூடத்தைச் சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைத்தார்.

தொடர்ந்து விருந்தினர்கள் கண்காட்சியினைப் பார்வையிட்டனர். தொடர்ந்து ஏனையோரும்  கண்காட்சியினைப் பார்வையிட்டனர்.

மேற்படி கண்காட்சிக் கூடத்தில் கோப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்பட்ட மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் இணைந்து கடந்த-2020 ஆம் ஆண்டு ஆடை வடிவமைத்தல், தையல் மற்றும் அழகுக் கலைப் பயிற்சிநெறிகளைப் பூர்த்தி செய்த மாணவிகளின் கைவண்ணத்தில் உருவான பல நூற்றுக்கணக்கான ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. 

பயிற்சி நெறிக் காலத்தில் சிறப்பான வகையில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவிகளுக்கு இன்றைய நிகழ்வில் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் பயிற்சிநெறியில் பங்குபற்றிய அனைத்து மாணவிகளுக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

(செய்தித்தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்-செ. ரவிசாந் )                                                               

Related posts

புத்தாண்டை முன்னிட்டு யாழ் உள்ளிட்ட பகுதிகளுக்கு விசேட ரயில் சேவை

N N

தேரேறும் நல்லைக் கந்தனுக்கு விண்ணப்பம்

TamilTwin

நாட்டில் 78 ஆயிரத்தைக் கிட்டும் கொரோனா!

SL News