உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் செலரி. இதில் அதிக சத்துக்கள் உள்ளன. செலரி இலைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உண்டு. இதை உணவில் சேர்த்துக் கொள்ளுவது மிகவும் அவசியமான ஒன்று. மிக எளிதாக இந்த செலரி ஜுஸ் தயாரிக்கலாம்.

செலரி, பசலைக் கீரையை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டி கொள்ளவும். எடுத்து வைத்துள்ள சாத்துக்குடியைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். பிறகு மிக்சியில் சாத்துக்குடி சாறை ஊற்றி அதனுடன் நறுக்கிய பசலைக் கீரை மற்றும் செலரியை போட்டு மிக்ஸியில் அரைக்கவும். பிறகு அதில் சுவைக்கு வைத்துள்ள லெமன் ஜூஸ் கலந்து குடிக்கவும். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலுக்கு புத்துணர்வையும் தரும். தினமும் காலை வெறும் வயிற்றில் செலரி ஜூஸ் குடிப்பதால் நல்ல பலனைத் தரும். காலை மட்டும் இல்லாமல் சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்போ அல்லது பின்போ கூட குடிக்கலாம். செலரியில் ஊட்டச்சத்துகளான வைட்டமின்கள், பொட்டாசியம் இருப்பதால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ளும்.
Ingredients
Instructions