fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

கோவையில் நேற்றைய தினம் திமுகவின் பொள்ளாச்சி வேட்பாளர் சண்முக சுந்தரத்தை ஆதரித்து மு.க ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். கோவை தொண்டாமுத்தூர் அருகே அவர் வாகனத்தில் பிரச்சாரம் செய்த போது அமைச்சர் வேலுமணி தொடர்பாக அவதுாறாக பேசியதாக மு.க.ஸ்டாலின் மீது கோவை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

      அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து மு.க.ஸ்டாலின் அவதூறாக பேசியதாக அதிமுக வழக்கறிஞர் அணியை சேர்ந்த ராமசந்திரன் என்பவர் புகார் அளித்துள்ளார். இதையடுத்து தொண்டாமுத்தூர், குனியமுத்தூர் காவல் நிலையங்களில் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் பெயருக்கு களங்கம் விளைவித்தல், மற்றும் தேர்தல் விதிமுறைகளை மீறியது போன்ற 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 153 கலங்கம் செய்வதற்கு தூண்டுவது, 504 பொதுமக்களின் அமைதியை சீர்குலைப்பது ,125 அமைதியை சீர்குழைப்பது ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

திமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு

      உள்ளாட்சி துறையில் அமைச்சர் வேலுமணி முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பார் நாகராஜனை காப்பாற்ற முயற்சிப்பதாகவும் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஸ்டாலின் பேசியிருந்தார். இதையடுத்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஆதாரமில்லாமல் அமைச்சர் வேலுமணி பற்றி அவதுாறாக பேசியதாக ஸ்டாலின் மீது புகார் கூறப்பட்டுள்ளது.

Related posts

புதுவையில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸினை அறிவித்த முதல் அமைச்சர் நாராயணசாமி!!

TT Media

தங்கத்தில் முகக்கவசம்: அசத்திய பணக்காரர்

World News

எஸ்.சி மாணவர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு மேல்படிப்பிற்காக ரூ. 59 ஆயிரம் கோடி கல்வி உதவித்தொகை ஒதுக்கிய இந்திய அரசு!!

TT Media