fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

கேரட் பாசிப்பருப்பு கூட்டு

கேரட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. காலை நேரத்தில் அரை டம்ளர் கேரட் சாறு குடித்துவர வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேறும். வயிறு சுத்தமாகும். உணவு நன்கு செரிமானம் ஆகும். பூச்சிகளால் வரும் நோய்களைத் தடுக்கிறது. உலர்ந்த சருமம் இருப்பவர்கள் கேரட் சாறுடன் தேன் அல்லது ஆலிவ் ஆயில் சேர்த்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் சருமத்துக்கு தேவையான சத்து கிடைக்கும். 

கேரட் பாசிப்பருப்பு கூட்டு

         குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும். கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும்.


கேரட் பாசிப்பருப்பு கூட்டு - Carrot Green Gram Musty

கேரட் பாசிப்பருப்பு கூட்டு கேரட் பாசிப்பருப்பு கூட்டு Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 250 calories 50 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • கேரட் - 150 கிராம்
  • பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
  • துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் - 1
  • மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  • உப்பு - தேவையான அளவு
  • துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
  • சீரகம் - 1 டீஸ்பூன்
  • எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
  • பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
  • கறிவேப்பிலை - சிறிதளவு
  • பச்சை மிளகாய் - 3

Instructions

பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்த பின்னர் அதனை குக்கரில் போட்டு, அத்துடன் துவரம் பருப்பு, 1 கப் தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். மிக்ஸியில் தேங்காய் மற்றும் சீரகம் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் தேவையான அளவு உப்பு மற்றும் கேரட்டை சேர்த்து, பச்சை வாசனை போக சிறிது நேரம் வதக்கி, பின் அதில் வேக வைத்த பருப்பு ஊற்றி கேரட் நன்கு வெந்த பின்னர், அதில் அரைத்த விழுதை ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க வைத்து இறக்கினால், கேரட்  பாசிப்பருப்பு கூட்டு ரெடி.

 

Related posts

உடல் எடையினைக் குறைக்கும் எள் துவையல்!!

N N

10 நிமிடத்தில் செய்யக்கூடிய சில்லி பிரை இட்லி!!

N N

சத்துகள் நிறைந்த சுறா புட்டு!!!

N N