fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

கஞ்சாவை மருந்து என்ற அடிப்படையில் பயிர் செய்ய வேண்டும் – டயானா

இலங்கைக்குள் கஞ்சாவை மருந்து என்ற அடிப்படையில் பயிர் செய்து, அவற்றை ஏற்றுமதி செய்வதன் ஊடாக கடன் சுமையிலிருந்து விடுப்பட முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இலங்கையில் பல்வேறு வகையான ஓளடத செய்கைகளை பயிரிட்டு, அவற்றை ஏற்றுமதி செய்வதன் ஊடாக அந்நிய செலாவணியை நாட்டிற்குள் கொண்டு வர முடியும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

தற்போது தடை செய்யப்பட்ட கஞ்சாவை, ஓளடத பயிராக அங்கீகரித்து, அதனூடாக அந்நிய செலவாணியை பெருமளவில் கொண்டு வர அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையிலிருந்து இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்ட இறப்பர், தெங்கு, தேயிலை போன்ற பிரதான ஏற்றுமதி செய்கைகளுக்கு மேலதிகமாக, ஓளடத பயிர் செய்கைகளையும் செய்ய முன்வர வேண்டும் என கூறிய அவர், உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளுக்கு கஞ்சா ஏற்றுமதியின் ஊடாக பாரியளவு வருமானம் கிடைப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அதன்படி,ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலீட்டு வங்கியின் தரவுகளுக்கு அமைய, உலகில் கஞ்சா வர்த்தகம் அடுத்த தசாப்தத்தில் 10 வீதத்தினால் அதிகரிக்கப்படும் என தெவித்த கமகே, 2027ஆம் ஆண்டாகும் போது 140 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும் எனவும் கூறினார்.

மேலும் இவ்வாறு கிடைக்கும் வருமானத்தில் 57 பில்லியன் அமெரிக்க டொலர் சட்ட ரீதியாக கிடைக்கும் எனவும் கஞ்சா ஏற்றுமதியில் அதிகளவிலான தொகை, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு விநியோகிக்கப்படும் என்றும் டயானா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

Related posts

யாழ்ப்பாணம் சத்திய சாயி சேவா நிலையத்தில் நாளை உயிர்காக்கும் பணி : விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

TamilTwin

தலிபான் இயக்க தலைவருடன் தொலைபேசியில் பேசிய டிரம்ப்

World News

அமெரிக்க இராஜதந்திரி விவகாரம் – ஜெனீவாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கண்டனம்

World News