பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தமிழக பாராளுமன்ற தொகுதிகளில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம் என்று விவாதிக்க ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். இந்த கருத்துக்களை தொண்டர்களிடம் நேரடியாக கேட்க தமிழக காங்கிரஸ் தலைவர் தீர்மானம் செய்துள்ளார்.
இதை குரல் பதிவு முலம் தொகுதியில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் குரல் பதிவு செய்துள்ளார். இவற்றை காங்கிரசின் சக்தி திட்டத்தின் நவீனமுறை என்று சொல்லப்படுக்கிறது. குரல் பதிவு சக்தி திட்டத்தில் உள்ள அனைவரும் போன்களுக்கு அனுப்பி தொகுதி வேட்பாளாராக இவரை போடுங்கள் என்று தொண்டர்கள் பதிவு செய்யும் வேட்பாளர் பெயர் டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் நேரடியாக பதிவாகும் என்பது குறிப்படத்தக்கது.

ஓவ்வொரு தொகுதியிலிருந்து தமிழக காங்கிரஸ்க்கு அனுப்பும் பட்டியலை ஒப்பீட்டு பார்த்து அதன் அடிப்படையில் தகுதியான வேட்பாளரை ராகுல் காந்தி முடிவு செய்வார் என்று கூறப்படுகிறது.
சக்தி திட்டத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளில் இணைந்துள்ள தொண்டர்கள் எண்ணிக்கை பல மாவட்டத்தில் இருந்து அதிகமாக வந்து கொண்டு இருக்கிறது. திருவள்ளூர் , கன்னியாகுமரி, ஆரணி , சிவகங்கை , கிருஷ்ணகிரி , கரூர் , விருதுநகர், திருச்சி ஆகிய ஊரில் இருந்து அதிகமாக வந்துள்ளது.
இவர்கள் அனைவரிடமும் போன் மூலம் கருத்து கேட்கப்படுக்கிறது முதல் முறையாக இந்த சக்தி திட்டத்தை புதிய முயற்சியில் காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்படத்தக்கது.