அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தாமே வேட்பாளராக களமிறங்கப் போவதாக எதிர்கட்சித்தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

எந்த சந்தர்ப்பத்திலும் இனி பொது வேட்பாளராகக் களமிறங்கப் போவதில்லை என்பதையும் அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.
வரலாற்றில் பொதுவேட்பாளர் என களமிறக்கப்பட்டு ஏமாற்றப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளை பாடமாகக் கொண்டு மீண்டும் அதனை செய்ய எத்தணிக்கக்கூடாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கேகாலை – தெரணியகல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.