fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

நடிகர் அஜித் படத்திற்கு இப்படி செய்யலாமா : ரசிகர்கள்

சினிமாக்களில் ரீமேக் என்பது எப்போதும் நடக்கக்கூடிய விஷயம் ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் சினிமா மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் ரீமேக் படங்கள் வெளிவருவதும், இடத்திற்குத் தகுந்தாற் போல் வெற்றியடைவதும் உண்டு.

ரீமேக் செய்யப்படும் படங்கள் பெரும்பாலும் மற்ற மொழியில் மிகப்பெரிய வெற்றி அடைந்த படமாகவே இருக்கும்.

நடிகர் அஜித் படத்திற்கு இப்படி செய்யலாமா : ரசிகர்கள்

ரீமேக்கில் பல வகை உண்டு. அப்படியே சீன் விடாமல் காப்பி அடிப்பது ஒரு வகை, இல்லையேல் கதையை அவரவர் மொழிக்கு ஏற்ப மாற்றுவது ஒரு வகை. அப்படி மாற்றும் போது அவரவர் மண்வாசனைக்கு ஏற்ப மாற்றி படத்தை ஹிட் ஆக்கிவிடுவர்.

ரீமேக் படங்களை அப்படியே காப்பி அடிப்பதாக இருந்தாலும் போஸ்டரைக் கூடவா காப்பி அடிப்பது என்று பிங்க் படத்தின் ரீமேக்கான நடிகர் அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தின் மீது விமர்சனம் எழுந்துள்ளது. நேர் கொண்ட பார்வையின் போஸ்டரைப் பார்த்ததும் ரசிகர்கள் மிகுந்த அதிருப்தி ஆகிவிட்டனர்.

ஆமாங்க அதுவும் நடிகர் அஜித் படத்திற்கு இப்படி பண்ணலாமா என்று ரசிகர்கள் ஒருபுறம் புலம்ப, பிங்க் படம் அப்படியே காப்பி அடிக்கப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்ப்பு குறைந்துள்ளது என்ற விமர்சனங்கள் மறுபுறம் எழுகிறது.

Related posts

அடுத்த படம் கேட்ட முருகதாஸ்! கடுப்பாகிய லைகா

TamilTwin India

பிக் பாஸ் பிரபலத்தின் புதிய போட்டோஷூட்

TamilTwin India

கோலாகலமாக நடைபெற்ற மைனா நந்தினியின் திருமணம்!!

N N