fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

தலைமுடி உதிர்வுக்கான இன்ஸ்டண்ட் ஹேர்பேக் செய்யலாமா?

பரபரப்பாக நாம் ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் நம்முடைய அழகினை வீட்டிலேயே ஹேர்பேக், ஃபேஸ்பேக் செய்து பயன்படுத்த நேரம் இல்லாமல் இருக்கிறோம் என்பது தெரிந்த விஷயமே. ஆனால் நான் இப்போது சொல்லப்போகும் ஹேர்பேக்கானது மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஹேர்பேக் ஆகும்.

தலைமுடி உதிர்வுக்கான இன்ஸ்டண்ட் ஹேர்பேக் செய்யலாமா?

தேவையானவை:

பாசிப் பயறு- 1 கப்

வெந்தயம்- 1 கப்

எலுமிச்சை பழத் தோல்- கைப்பிடி அளவு

செய்முறை:

1.         பாசிப் பயறு மற்றும் வெந்தயத்தினை 4 மணி நேரம் நன்கு ஊறவைத்துக் கொள்ளவும்.

2.         அடுத்து அதனை மறுநாள் காலை அலசி முளைகட்டிக் கொள்ளவும்.

3.         அடுத்து முளைகட்டி தானியங்கள் மற்றும் எலுமிச்சை பழத் தோலினை காயவைத்து எடுத்து மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இந்த பொடியினை தண்ணீர் அல்லது தயிர் சேர்த்து கலந்து தலைமுடியில் அப்ளை செய்து சீயக்காய் கொண்டு முடியினை அலசினால் தலைமுடி உதிர்வு கட்டுக்குள் வரும்.

Related posts

பெப்பர் மின்ட் ஆயில் வீட்டிலேயே செய்யலாம் வாங்க!!

N N

வறட்சியான சருமத்திற்கான ஃபேஸ் பேக்!!

N N

மூணே பொருளில் வெள்ளை முடியினை கருப்பாக மாற்றலாம்!!

N N