fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

முட்டைகோஸ் வடை

முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதனையே உணவாகப் பயன்படுத்துகிறோம். இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது. கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

முட்டைகோஸ்  வடை

மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்று வலியை  நீக்கும். சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும். தலைமுடி உதிர்வதைக் குறைக்கும்

முட்டைகோஸ் வடை - cabbage Vada

முட்டைகோஸ்  வடை முட்டைகோஸ் வடை Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 250 calories 50 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • உளுத்தம்பருப்பு - 1 கப்
  • கோஸ் - 1 கப்
  • இஞ்சி - 1 துண்டு
  • பச்சை மிளகாய் - 2
  • கறிவேப்பிலை - சிறிது
  • சீரகம் - அரை டீஸ்பூன்
  • உப்பு - ருசிக்கேற்ப
  • எண்ணெய் - தேவையான அளவு

Instructions

முதலில் உளுத்தம் பருப்பை  ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின் அரைத்து கொள்ளவும். பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைத்து  கொள்ளவும். பின் அரைத்த மாவுடன் நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.  பின் ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி சூடானதும்  மாவை எடுத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். சூப்பரான கோஸ் வடை ரெடி.

Related posts

சத்து நிறைந்த பருப்புக் கீரை கோதுமை அடை

N N

தித்திக்கும் உருளைக்கிழங்கு அல்வா!!

N N

குளுகுளு கேரட் மில்க் ஷேக்!!

N N