Friday, February 3, 2023
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்ஒரு சாப்பாடு வாங்கினா இன்னொன்னு ஃப்ரீ.. இலவசத்துக்கு ஆசைப்பட்டு 8.5 லட்சத்தை இழந்த பெண்!

ஒரு சாப்பாடு வாங்கினா இன்னொன்னு ஃப்ரீ.. இலவசத்துக்கு ஆசைப்பட்டு 8.5 லட்சத்தை இழந்த பெண்!

ஆன்லைன் மூலம் நாம் எளிதில் எந்தவொரு விஷயத்தினையும் செய்ய முடியும் என்ற ஆதாயம் இருந்தாலும், மற்றொரு புறம் மோசடிகள் தொடர்ந்து நடந்த வண்ணமே உள்ளது.

அந்தவகையில் மும்பையைச் சார்ந்த பெண் ஒருவர் ஒரு சாப்பாடு வாங்கினால் இன்னொன்று இலவசம் என்ற ஆஃபரால் 8.5 லட்சம் ரூபாய் பறிகொடுத்துள்ள சம்பவம் அரங்கேறி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மும்பை அருகே உள்ள பாத்ரா பகுதியைச் சார்ந்தவர் அசீமா. இவருக்கு 57 வயது.

இவர் ஃபேஸ்புக்கில் ஒரு சாப்பாடு வாங்கினால் இன்னொரு சாப்பாடு இலவசம் என்ற விளம்பரத்தைப் பார்த்துள்ளார்.

ஒரு சாப்பாட்டின் விலை ரூ.200, அதனால் அசீமா ஒரு சாப்பாட்டை அவரது டெபிட் கார்டைப் பயன்படுத்தி ஆர்டர் செய்ய லிங்க் ஒன்றினைக் க்ளிக் செய்துள்ளார்.

அந்த லிங்க்கை க்ளிக் செய்ததும் சிறிது நேரத்தில் தீபக் என்ற நபர் கால் செய்து டெபிட் கார்டு விவரங்களைக் கேட்டுள்ளார்.

அசீமாவும் டெபிட் கார்டு விவரங்களைக் கூற, தொடர்ந்து 27 முறை என்ற அளவில் 8.5 லட்சம் ரூபாய் டெபிட் ஆகியுள்ளது.

இதுகுறித்த மெசேஜ் மொபைலுக்கு வர அதிர்ச்சியான அசீமா அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular