Thursday, December 1, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்இரட்டைக் குழந்தைகளுக்குத் தாத்தாவானார் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி!

இரட்டைக் குழந்தைகளுக்குத் தாத்தாவானார் தொழில் அதிபர் முகேஷ் அம்பானி!

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானிக்கு இரட்டைப் பேரக் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு முகேஷ் அம்பானியின் மகளான இஷாவுக்கு பிரமல் குழுமத்தின் தலைவரான அஜய் பிரமலின் மகனான ஆனந்த் பிரமலுக்கும் திருமணம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

நாடு முழுவதும் பெரிதளவில் பேசப்பட்ட இந்தத் திருமணத்தில் சாப்பாடு முதல் வரவேற்பு மேடை வரை அனைத்து இடங்களிலும் பல கோடிக்கணக்கில் பணமானது கொட்டிக் கொட்டித் திருமணம் நடைபெற்றது.

நாடு முழுவதிலும் இருந்து பிரபலத் தலைவர்கள், தொழில் அதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து முகேஷ் அம்பானி தன்னுடைய மகள் இஷா அம்பானியை ரிலையன்ஸ் சில்லறை வணிகத்தின் தலைவர் என்ற பதவியைக் கொடுத்தார்.

சிறந்த தொழிலதிபராக நியமித்த இஷா அம்பானி சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல் வெளியாகியது.

இதனைத் தொடர்ந்து இஷாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளது. இந்தக் குழந்தைகளில் ஒரு குழந்தை ஆண் குழந்தையும், ஒரு குழந்தை பெண் குழந்தையும் ஆவர்.

பெண் குழந்தைக்கு ஆதியா மற்றும் ஆண் குழந்தைக்கு கிருஷ்ணா என்றும் பெயர் வைத்துள்ளனர்.

இதுகுறித்து ரிலையன்ஸ் குழு தரப்பில் அதிகாரப்பூர்வ சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular