பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து – பெண் படுகாயம்

வடமராட்சி, கரணவாய் தெற்கு- மண்டான் வீதியில், இன்று (25) முற்பகல் 11.30 மணியளவில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில், இளம்பெண் ஒருவர் படுகாயங்களுக்கு உள்ளானார்.

வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த எஸ்.சிவகலா (வயது -30) என்பவரே, இவ்வாறு படுகாயங்களுக்கு உள்ளானார்.

படுகாயமடைந்தவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து தொடர்பில், நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.