fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்.நகரில் பறக்கிறது பெளத்த கொடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!! (Photos) {புதிய இணைப்பு}

சிங்கள- பௌத்த மயமாக்கல் மற்றும் நில ஆக்கிரமிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக யாழ்.நகரின் மத்திய பகுதியில் சிங்கள பௌத்த கொடி நிறுவப்பட்டுள்ளது. யாழ். பஸ்நிலையத்திற்கு அருகிலுள்ள சந்தியில் காணப்படுகின்ற மணிக்கூட்டுக் கோபுரத்தின் கீழ் இந்தக் கொடி நாட்டப்பட்டுள்ளது.

நன்கு திட்டமிடப்பட்டு எங்கிருந்தோ கொண்டு வரப்பட்ட கற்களை ஒன்று சேர்த்து ஒரு மேடை போல் அமைக்கப்பட்டுப் பின்னர் ஒரு கம்பியில் இக் கொடி நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த கொடியின் கீழ் மலர்கள் சூடி வணக்கமும் செலுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் அங்கிருந்த கடை வியாபாரிகளிடம் வினாவிய போது,

இங்கு நிறுவப்படடுள்ள கொடி மற்றும் கற்கள், கம்பிகள் எவையும் இங்கு காணப்படவில்லை. எங்கிருந்தோ கொண்டு வரப்பட்டு நிறுவப்பட்டுள்ளதாகவும் தாங்கள் காலையில் வரும்போதே இது காணப்பட்டதாகவும் தெரிவித்தார்கள்.

இதுதொடர்பில் யாழ். மாநகரசபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கருத்துத் தெரிவிக்கையில்,

சிங்கள- பௌத்த பேரினவாதம் எமது பூர்வீக நிலங்களை மெல்ல மெல்ல விழுங்க முயற்சிக்கின்றது. ஆனால் அதனை நாம் தமிழ்த்தேசமாக ஒன்று திரண்டு நிறுத்த வேண்டும்.

நாம் என்ன வகையான ஆயுதத்தை எடுக்க வேண்டுமென எம்முடைய எதிரியே தீர்மானிக்கின்றான் என்கின்ற மாவோவின் கருத்துப் படி, சிங்கள- பௌத்த பேரினவாதம் எங்களுடைய தமிழ்த்தேசத்து நிலங்களில் இவ் வகையான சின்னங்களை நிறுவி மெல்ல மெல்லப் பௌத்த மயமாக்கலுக்குட்படுத்தி அதனைப் பறித்தெடுகின்ற செயற்பாடுகள் தொடருமாயின் நாம் எமது மிகவும் தொன்மையான தமிழ் வரலாற்றினை அதன் பெருமைகளை எடுத்துக் கூறுகின்ற நினைவுச் சின்னங்களை எமது தாயக மண் பறிபோதலைப் தடுக்கும் நோக்குடன் எமது பிரதேசங்கள் எங்கும் நிறுவும் நிலை ஏற்படலாம் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

ஏனெனில், சிங்கள- பௌத்த பேரினவாதத்திற்கு எவ்வாறு எங்கள் நிலங்களை பறித்தெடுகின்ற, இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கின்ற, பௌத்த மயமாக்கலுக்குட்படுத்த அக்கறை இருக்கின்றதோ அதே அக்கறை எமது தாயகப் பிரதேசங்கள் பறிபோகாமல் தடுப்பதில் எமக்கிருக்கின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

{இரண்டாம் இணைப்பு}

யாழ்ப்பாணம் மாநகர மத்தியில் பௌத்த கொடியொன்று அடையாளம் தெரியாதவரால் கட்டப்பட்டு மலர் சூட்டப்பட்டமை அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் அதிரடிச் செயற்பாட்டினால் குறித்த கொடி இன்று(15) பிற்பகல் அங்கிருந்து அகற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்றிரவு மீண்டும் அதே இடத்தில் வேறொரு பெளத்த கொடி நாட்டப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

{எஸ்.ரவி}

Related posts

அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக இடை நிறுத்தம்!

World News

பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அதி விசேட வர்த்தமானி வௌியீடு

World News

பொலிஸாரால் தாக்கப்பட்ட மன்னார் அருட் தந்தை: வலுக்கும் எதிர்ப்புகள்

World News