அமெரிக்காவில் அண்ணன் தங்கை காதலித்துத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ரிச்சர்ட்- ரியா தம்பதியினர். இவர்கள் ஏறக்குறைய 2 ஆண்டுகளாகக் காதலித்த நிலையில் 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது, திருமணமாகி 13 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாந்து வந்துள்ளனர் ரிச்சர்ட்- ரியா தம்பதியினர்.
இந்தநிலையில் இவர்கள் இருவரும் உடன் பிறந்த அண்ணன் தங்கை என்று செய்தி தெரியவந்துள்ளது, இந்த செய்தியைக் கேட்ட இருவரும் ஷாக் ஆகிப் போய் உள்ளனர்.
அதாவது இவர்கள் காதலித்து வந்தபோது இருவரின் குடும்பப் பெயரும் ஒன்றாக இருப்பது குறித்து இருவரும் ஒரு வேளை உறவினர்களா? என்று சந்தேகித்து உள்ளனர்.
ஆனால் இருவரும் உறவினர்கள் இல்லை என்ற நம்பிக்கையோடு திருமணம் செய்துள்ளனர்.
இதனையடுத்து தற்போது ரிச்சர்ட்- ரியா இருவரும் ஒரே தந்தைக்குப் பிறந்தவர்கள் என்ற செய்தி தெரியவர அனைவரும் ஷாக் ஆகியுள்ளது.
இந்த செய்தி இணையத்தில் கசிய நெட்டிசன்கள் ஏகபோகத்துக் கிண்டலடிக்கின்றனர்.