fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » சிஎஸ்கேவின் வெற்றி ரகசியத்தை வெளிப்படுத்திய பிராவோ
இந்தியச் செய்திகள்

சிஎஸ்கேவின் வெற்றி ரகசியத்தை வெளிப்படுத்திய பிராவோ

ஐபிஎல் கிரிகெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது. சென்னை அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றி ரகசியத்தை வெளிப்படுத்தியுள்ளார் பிராவோ.

      டெல்லி கேபிடல்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தனது 2 வது வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி. முதலில் ஆடிய டெல்லி 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களை எடுத்தது. பின்னர் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 150 ரன்களை செர்த்து வென்றது. இதனால் முதலிடத்தை சிஎஸ்கே அணி பெற்றது. இந்த ஆட்டத்தில் தோனியைக் கொண்டு கடைசிவரை விளையாடத் திட்டம் திட்டினீர்களா எனக் கேட்கிறீர்கள் சிலர். அதற்கு ஆல்ரவுண்டர் பிராவோ கூறியது.

சிஎஸ்கேவின் வெற்றி ரகசியத்தை வெளிப்படுத்திய பிராவோ

     நாங்கள் எதையும் திட்டமிட மாட்டோம். எங்களுக்கு மத்தியில் டீம் மீட்டிங்குகளும் நடக்காது. நேராக விளையாட வந்து, சூழலுக்கு ஏற்றாற்போல எங்களை மாற்றிக்கொள்வோம். உலகின் மிகச்சிறந்த கேப்டன் எங்கள் அணிக்குத் தலைமை தாங்குகிறார். நாங்கள் விரைவாக நகரும் தன்மை கொண்டவர்களாக இல்லையென்றாலும் ஸ்மார்ட்டான அணியாக இருக்க வேண்டும் என்பதை தோனி அடிக்கடி நினைவுபடுத்துவார் என்று கூறியுள்ளார்.

Related posts

வேலைக்கு வந்த வடமாநிலப் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த குடும்பம்

World News

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வேண்டும்!- இந்தியாவில் விக்னேஸ்வரன் பேச்சு

World News

மத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் -நிர்மலா சீதாராமன் பேட்டி!!

TT Media