fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » தலையின்றி மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் – மற்றுமொரு விசேட பொலிஸ் குழு
இலங்கைச் செய்திகள் செய்திகள்

தலையின்றி மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் – மற்றுமொரு விசேட பொலிஸ் குழு

கொழும்பில் பயணப்பையிலிருந்து தலையின்றி பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக மற்றுமொரு விசேட பொலிஸ் குழுவொன்று களமிறங்கியுள்ளதாக தெரியவருகிறது.

சடலமாக மீட்கப்பட்ட குறித்த பெண்ணின், துண்டிக்கப்பட்ட தலையைத் தேடி தொடர்ச்சியான விசாரணை மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.

களனி கங்கையின் இரு பக்கங்களிலும் விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதே நேரத்தில் சம்பவத்தில் சந்தேகநபராக அடையாளப்படுத்தப்படும் உப பொலிஸ் பரிசோதகரின் வீட்டு கிணற்றிலும் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த விசேட பொலிஸ் குழு விசாரணைகளுக்காக களமிறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

யாழ்.நகரில் கவரிங் நகைகளை விற்க முயன்ற நபர் கைது!

TamilTwin

நாட்டில் மேலும் 120 பேருக்குக் கொரோனா!

SL News

புத்தூரில் கோர விபத்து: நால்வர் படுகாயம்!

TamilTwin