Tuesday, September 27, 2022
HomeEvents-நிகழ்வுகள்யாழ்.திருநெல்வேலியில் இடம்பெற்ற இரத்ததான முகாம்: 28 பேர் ஆர்வத்துடன் குருதிக் கொடை(Photos)

யாழ்.திருநெல்வேலியில் இடம்பெற்ற இரத்ததான முகாம்: 28 பேர் ஆர்வத்துடன் குருதிக் கொடை(Photos)

யாழ்.திருநெல்வேலியைத் தளமாக கொண்டு இயங்கும் அக்னி இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் Northway Family Mart இன் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான முகாம் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(14.8.2022) யாழ்.திருநெல்வேலி சிவன் வீதியில் அமைந்துள்ள ஜே-110 கிராம அலுவலக முன் மண்டபத்தில் நடைபெற்றது.

காலை-9 மணி முதல் பிற்பகல்-2.30 மணி வரை இடம்பெற்ற குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் 34 பேர் குருதிக் கொடை வழங்க முன்வந்த போதிலும் அவர்களில் உரிய பரிசோதனைகளின் அடிப்படையில் 28 பேர் குருதிக் கொடை வழங்குவதற்குத் தகுதி பெற்றனர். அந்தவகையில் அக்னி இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள், திருநெல்வேலி மற்றும் அயற் பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதிக் கொடையாளர்களிடமிருந்து குருதி சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதேவேளை, அக்னி இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் மூன்றாவது தடவையாக குறித்த இரத்ததான முகாம் நிகழ்வு ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் காலங்களிலும் வருடாவருடம் தொடர்ச்சியாக இடம்பெறும் எனவும் அக்னி இளைஞர் அணியின் செயலாளர் பா.டிலக்சன் தெரிவித்தார்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

.

RELATED ARTICLES

Most Popular