யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்போது நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான முகாம் இன்று புதன்கிழமை(09.11.2022) காலை-8.30 மணி முதல் பிற்பகல்-2 மணி வரை கல்லூரி மண்டபத்தில் மேற்படி கல்லூரியின் அதிபர் து.யேசுதானந்தர் தலைமையில் இடம்பெற்றது.







மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் கல்லூரியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், மாணவர்களின் பெற்றோர், சமூக ஆர்வலர்கள் என 30 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு உயிர் காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.
குறித்த இரத்ததான முகாம் நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு குருதிச் சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


இதேவேளை, இந்த இரத்ததான முகாம் நிகழ்வு முதல் தடவையாக மல்லாவி மத்திய கல்லூரிச் சமூகத்தால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டிருந்ததுடன் எதிர்வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக ஏற்பாடு செய்து நடாத்தப்படும் எனவும் கல்லூரிச் சமூகத்தினர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.





(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)