யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் தேவை கருதி கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையமும் குமரன் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை (04.12.2022) காலை-08.30 மணி முதல் யாழ்.கோண்டாவில் சந்தி அருகாமையில் அமைந்துள்ள குட்டிச் சுட்டி முன்பள்ளியில் இடம்பெற உள்ளது.
உதிரம் கொடுத்து உயிரைக் காக்கும் மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இரத்ததானம் வழங்கும் அனைவருக்கும் பரிசில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)