யாழ்.மாவட்டத் திரிசாரணர் குழாம் மற்றும் நல்லூர் லயன்ஸ் கழகம் இணைந்து நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை(03.7.2022) காலை-8 மணி முதல் பிற்பகல்-2 மணி வரை சுண்டுக்குளியில் அமைந்துள்ள கிறீன் பீல்ட் சனசமூக நிலைய மண்டபத்தில் யாழ்.மாவட்டத் திரிசாரணர் குழாமின் தலைவர் என்.மஞ்சுதன் தலைமையில் நடைபெற்றது.
நேற்றுக் காலை-9 மணி முதல் பிற்பகல்-2 மணி வரை இடம்பெற்ற இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் யாழ்.மாவட்டச் சாரணர் ஆணையாளர் இ.தவகோபால் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். அத்துடன் நான்கு உதவி மாவட்டச் சாரணர் ஆணையாளர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தற்போதைய நெருக்கடியான சூழலிலும் சாரணர்கள் மற்றும் பொதுமக்கள் என 30 பேர் வரையானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கினர். குருதிக் கொடை வழங்கிய அனைவருக்கும் ஊக்குவிப்பாகப் பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவின் மருத்துவர் வைத்தியகலாநிதி ம.பிரதீபன், பொதுச் சுகாதார உத்தியோகத்தர் த.ரவினதாஸ் உள்ளிட்ட இரத்தவங்கிப் பிரிவினர் மேற்படி இரத்ததான முகாமில் நேரடியாகக் கலந்து கொண்டு குருதி பெற்றுக் கொண்டனர்.


(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)