fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » கடும் இரத்தத் தட்டுப்பாடு: யாழ்.அராலியில் இளைஞர்கள் செய்த உயிர்காக்கும் பணி (Photos)
Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

கடும் இரத்தத் தட்டுப்பாடு: யாழ்.அராலியில் இளைஞர்கள் செய்த உயிர்காக்கும் பணி (Photos)

அராலி தெற்கு சைவத்தமிழ் இளைஞர் மன்றத்தினரின் ஏற்பாட்டில் மாபெரும்  இரத்ததான முகாம் நிகழ்வு  இன்று ஞாயிற்றுக்கிழமை(24) காலை- 09.30 மணி முதல் கரைப்பிட்டிப் பிள்ளையார் கோவிலடியிலுள்ள  அராலி தெற்கு கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. 

மேற்படி இரத்ததான முகாம் நிகழ்வில் யுவதியொருவர் மற்றும் இளைஞர்கள் என 52 பேர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.   

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம. பிரதீபன்,   யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கிப் பிரிவினர் ஆகியோர் நேரடியாகச் சென்று இரத்தம் பெற்றுக்  கொண்டனர். 

தற்போதைய கொரோனா சுகாதார நடைமுறைகளுக்கு அமைய இரத்ததான முகாம் இடம்பெற்றது.

யாழ்.மாவட்டத்தில் தற்போது அனைத்துக் குருதி வகைகளுக்கும் கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தநிலையில் அராலி தெற்கு சைவத்தமிழ் இளைஞர் மன்றத்தினரின் ஏற்பாட்டில் குறித்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்து நடாத்தியுள்ளமை மிகுந்த வரவேற்புக்குரியது எனத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி ம.பிரதீபன் தெரிவித்தார். 

இதேவேளை, குறித்த இரத்ததான முகாமில் பங்கேற்ற இளைஞர்களுக்கு இரத்த வங்கிச் சமூகம் சார்பான நன்றிகளையும், வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

{சிறப்புத் தொகுப்பு:- செ. ரவிசாந்}

Related posts

பாகிஸ்தான் நடத்திய அணு ஏவுகணை சோதனை வெற்றி

World News

வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இளைஞன் கைது

World News

மகிழ்ச்சியுடன் பறை இசைத்த பேரறிவாளன்!- உறவுகள் நெகிழ்ச்சி (Videos)

World News