fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

சங்கானையில் சத்திய சாயி பாபாவின் 95 ஆவது அவதார தினத்தை முன்னிட்டு உயிர்காக்கும் பணி (Video, Photos)

சங்கானை ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலைய இளைஞரணியின் ஏற்பாட்டில் வடபிராந்திய சத்தியசாயி சர்வதேச நிறுவனத்தின் மேற்பார்வையில் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று சனிக்கிழமை(21) சங்கானை சத்திய சாயி சேவா நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் திங்கட்கிழமை(23) பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபாவின் 95 ஆவது அவதார தினம் இடம்பெறுவதை முன்னிட்டு இடம்பெற்ற குறித்த இரத்ததான முகாமில் சத்திய சாயி சேவா நிலைய அன்பர்களான இளைஞர், யுவதிகளும், சங்கானை மற்றும் அயற் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களும் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கியுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இந்த இரத்ததான முகாமில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் நேரடியாகக் கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, இந்த வருடம் முதல் தடவையாக கடந்த ஏப்ரல் மாதம் சங்கானை ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலைய இளைஞரணியின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டுள்ளதாகவும், இன்றைய தினம் இரண்டாவது தடவையாகத் தம்மால் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்து நடாத்தப்படுவதாகவும் சங்கானை ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலைய இளைஞரணியின் தலைவர் வரதராஜன் நிருபன் தெரிவித்தார்.

இதேபோன்று எதிர்வரும் காலங்களில் வருடம் தோறும் ஏப்ரல், நவம்பர் மாதங்களில் இரத்ததான முகாம் நிகழ்வுகளை ஏற்பாடு செய்து நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி, படங்கள்:- செ. ரவிசாந்}

Related posts

மகிந்த ராஜபக்சவை வெகுவாகப் பாராட்டியுள்ள சம்பந்தன்!!

TamilTwin

நிர்பயா வழக்கு- மரண தண்டனையை தள்ளிப்போட தன்னைத்தானே காயப்படுத்திய குற்றவாளி

World News

பண்ணை பெண்கள் விவசாய நிகழ்ச்சி திட்டத்தின் காளான் கஞ்சி

World News