fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » யாழ்.கொய்யாத் தோட்டம் இளைஞர் நற்பணிமன்றத்தின் ஒரு வருட நிறைவு: இளைஞர்கள் செய்த நற்காரியம் (VIDEO, PHOTOS)
Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்.கொய்யாத் தோட்டம் இளைஞர் நற்பணிமன்றத்தின் ஒரு வருட நிறைவு: இளைஞர்கள் செய்த நற்காரியம் (VIDEO, PHOTOS)

யாழ்ப்பாணம் கொய்யாத் தோட்டம் இளைஞர் நற்பணிமன்றம் ஆரம்பமாகி ஒருவருட நிறைவை முன்னிட்டு நற்பணிமன்றத்தின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை(10) காலை-09 மணி முதல் பிற்பகல்-02 மணி வரை கொய்யாத் தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இடம்பெற்றது.

குறித்த இரத்ததான முகாமை யாழ்ப்பாணம் பிரதேச செயலர் ரி. சுதர்சன் விருந்தினராக கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இரத்ததான முகாம் ஆரம்ப நிகழ்வில் கொய்யாத் தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் பங்குத் தந்தை சிவப்பிரகாசம் மரியபற்றிக் ஆனந்தகுமார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உணர்வழியியல் வைத்தியர் என்.நிக்ஸன், கொய்யாத் தோட்டம் ஜே-66 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த கிராம அலுவலர் கே.முல்லைமாறன், ஜே-65 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த கிராம அலுவலர் திருமதி- கே.தாரகா, ஜே-67 கிராமசேவகர் பிரிவைச் சேர்ந்த ஸ்ரீ.ரமணன், மேற்படி கிராமத் தாதிய உத்தியோகத்தர் திருமதி- அருந்ததி, கொய்யாத் தோட்டம் இளைஞர் நற்பணி மன்றத்தினர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி இரத்ததான முகாமில் கொய்யாத் தோட்டம் கிறிஸ்து அரசர் ஆலயத்தின் பங்குத் தந்தை சிவப்பிரகாசம் மரியபற்றிக் ஆனந்தகுமார், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உணர்வழியியல் வைத்தியர் என்.நிக்ஸன் மற்றும் கொய்யாத் தோட்டம் இளைஞர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள் உள்ளிட்ட கொய்யாத்தோட்டம் கிராம இளைஞர்கள், அயற் கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் என 54 பேர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்தவங்கிப் பிரிவைச் சேர்ந்த வைத்தியர் வைத்தியகலாநிதி ம. பிரதீபன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் த. ரவினதாஸ் மற்றும் இரத்தவங்கிப் பிரிவு உத்தியோகத்தர்கள் நேரடியாக கலந்து கொண்டு இரத்தம் பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, குறித்த இரத்ததான முகாம் தொடர்பில் யாழ்ப்பாணம் கொய்யாத் தோட்டம் இளைஞர் நற் பணிமன்றத்தின் இயக்குனர் ஜெகதீஸ்வரன் மயூரன் எமது செய்திச் சேவைக்கு விசேடமாக கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் கொய்யாத் தோட்டம் இளைஞர் நற்பணிமன்றம் ஆரம்பமாகி இன்றைய தினம் ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு நாம் இந்த இரத்ததான முகாமை ஏற்பாடு செய்து நடாத்துகின்றோம்.

கடந்த வருடம் கொரோனாத் தொற்றுக் காரணமாக யாழில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் எமது கிராம மக்கள் உட்பட யாழ்.மக்கள் வாழ்வாதார ரீதியாகப் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் தான் இளைஞர்கள் நாம் ஒன்றிணைந்து கொய்யாத் தோட்டம் இளைஞர் நற்பணிமன்றத்தை ஆரம்பித்து எமது கிராம மக்களுக்கும், அயற்கிராம மக்களுக்கும் உதவிகள் வழங்கினோம்.

அன்றிலிருந்து எமது அமைப்பு கொய்யாத் தோட்டத்தை தளமாக கொண்டு செயற்பட்டு வருகிறது. நாம் இதுவரை பல்வேறு சமூகப் பணிகள் மேற்கொண்டுள்ள நிலையில் எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக சமூகப் பணிகள் ஆற்றுவதற்குத் தீர்மானித்துள்ளோம்.

இன்றைய தினம் தடவையாக இரத்ததான முகாமை ஒழுங்கு செய்து நடாத்தியுள்ளோம். முதலாவது இரத்ததான முகாம் நிகழ்வில் எமக்கு கிடைத்த ஆதரவால் நாம் மனம் மிக மகிழ்கிறோம். எதிர்வரும் காலங்களிலும் இரத்ததானப் பணிகளை மேற்கொள்வதற்கு ஆர்வமாகவுள்ளோம் எனவும் தெரிவித்தார்.

(சிறப்புத் தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்:- செ. ரவிசாந்)

Related posts

தீயில் கருகிய உடலில் கொரோனா தொற்று!

SL News

வவுனியாவில் ஆர்.பி.ஜி மீட்பு

World News

பக்கவாட்டுத் துளை அமைக்கும் பணி மிகப் பெரிய சவால்: அதிகாரி வெளியிட்ட தகவல்!!

TamilTwin