fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

இறுதிச் சுற்றில் பிளிஸ்கோவா – மியாமி ஓபன்

மியாமி ஒபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதிச் சுற்றுக்கு ரோஜர் பெடரர் டெனிஸ் ஷபவலோவ் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

     வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஒற்றையர் காலிறுதி ஆட்டத்தில் பெடரர் 6-0, 6-4 என்ற நேர் செட்களில் தென்னாப்பிரிக்க வீரர் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தினார். மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் கனடா வீரர் டெனிஸ் ஷபவலோவ் 6-7, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டியாபோவை போராடி வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். முதல் அரையிறுதியில் நடப்பு சாம்பின் ஜான் ஐஸ்நர்-ஆகர் அலாசிம் மோதுகின்றனர். இரண்டாவது அரையிறுதியில் பெடரர்-லெனிஸ் மோதவுள்ளனர்.

இறுதிச் சுற்றில் பிளிஸ்கோவா - மியாமி ஓபன்

     இறுதிச் சுற்றில் பிளிஸ்கோவா மகளிர் ஒற்றையர் பிரிவில் சிமோனா ஹலேப்- கரோலினா பிளிஸ்கோவா இடையே நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது பிளிஸ்கோவா 7-5 என செட்டை வென்றிருந்தார். இரண்டாவது செட்டிலும் 5-0 என முன்னிலை பெற்றிருந்தார். மழை நின்றதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியதில் இரண்டாவது செட்டையும் 6-1 என கைப்பற்றினார் பிளிஸ்கோவா. இதன் மூலம் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

Related posts

காங்கிரஸ் குழப்பத்தை ஏற்படுத்துகிறது: நிர்மலா சீதாராமன்

World News

21 ஆவது வயதில் இளம் நீதிபதி (Video)

World News

தனி ஆளாக நின்று நெற்பயிர் நட்ட கல்லூரி மாணவி

N N